Tamil

“தனிமைச்சுவையுள்ளசொல்லை–எங்கள்

தமிழினும்வேறெங்கும்யாம்கண்டதில்லை”


என்னும் பாரதிதாசனின் பாடல்வரிகள் தமிழ்மொழியின் இனிமையை,

சிறப்பை யாவர்க்கும் உணர்த்தும்.

காலங்கள் மாற்றம் அடைந்தாலும், உலகின் கண்டங்கள் பல அழிந்து இருந்தாலும் என்றென்றும் அழியாத செல்வமாய் விளங்குவது, தமிழ்மொழியே. அத்தகைய தமிழ்மொழியானது, எம்பள்ளியில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றது.


மொழிப்பாடத்தின் அடிப்படைத் திறன்களை வளர்த்தல், கற்பனைத்திறன் மற்றும் அழகுணர்ச்சியை உருவாக்குதல், பிறபாடங்களைக் கற்பதற்குரிய வாயிலாக மொழிப்பாடம் இருப்பதை உணர்த்தல், வாழ்க்கையைச் செம்மைப்படுத்துதல், மாணவர்களுடைய கருத்து வெளிப்பாட்டின் தேவைகளை நிறைவு செய்தல் ஆகிய நோக்கங்களை நிறைவு செய்வதாகத் தமிழ்மொழியானது மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.“பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி. ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவைகளே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவைகளும் மொழியே ஆகும்” என்கிறார் மு.வ. அவர் கூற்றுப்படி, மாணவர்களின் சிந்தனையாற்றலை மேம்படுத்தும் விதமாக பல்விதப் போட்டிகள் இங்கு நடத்தப்படுகின்றன.கவியரசர் கண்ணதாசன் அவர்களை நினைவுகூறும் வகையிலும் பள்ளியின் நிறுவனர் செவாலியர் டி.தாமஸ் ஐயா அவர்கள் மற்றும் எலிசபெத் தாமஸ் அம்மையார்அவர்களை நினைவுகூறும் வகையிலும் ஆண்டுதோறும் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளில் எமது பள்ளி மாணவர்கள் பங்கேற்று, பரிசுகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துவருகின்றனர். மாணவர்களின் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக பள்ளி அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்”

என்னும் பாரதியின் எண்ணம் எம்பள்ளி மாணவரின் திறமையால் மெய்ப்படும் வண்ணம் ஆசிரியர்களாகிய நாங்கள் ஆற்றுவோம் நற்பணியை என்றென்றும்.........

-தமிழ்த்துறை

  • Mrs. Uma Maheswari
    2021 - 2022
    M.A.B.Ed.
  • Mrs. Nirmala T
    2021 - 2022
    M.A.B.Ed.
  • Mrs. Kalaichelvi R
    2021 - 2022
    M.A.M.Phil.,B.Ed.
  • Mrs. Portia Clara W.S
    2021 - 2022

    M.A.B.Ed.

  • Mrs. R. Maheswari
    2021 - 2022

    M.A.M.Phil.,B.Ed

  • Mrs. Lalitha
    2021 - 2022

    M.A M.Phil B.Ed.,